பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் துணை முதல்வர் சிவக்குமாரை கோயில் அதிகாரிகள் மலை கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை நேரத்தில் நடைபெறக்கூடிய சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார். கோயில் அதிகாரிகள் துணை முதல்வர் சிவக்குமாருக்கு பிரசாதங்கள் வழங்கினர். தொடர்ந்து மலைக் கோயிலில் நடைபெறக்கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிவகுமார் ; பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்ததாகவும், தமிழகத்திற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பழனிக்கு கர்நாடகாவில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பேருந்து சேவையை துவங்க துறை அமைச்சரிடம் கூறுவதாக தெரிவித்தார். துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கமால் தவிர்த்து விட்டு சென்றார்.
பழனி முருகன் கோயிலில் கர்நாடக துணை முதல்வர் சாமிதரிசனம்..
- by Authour
