Skip to content

திருச்சி ஏர்போட்டில் நாளை விரைவான குடியேற்ற சேவை திட்ட தொடக்க விழா

  • by Authour

நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்டிஐ-டிடிபி) செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள் ளது. அதன்படி, டெல்லி விமான நிலையத்தின் 3 முனையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 22ந்தேதி முதல் இத்திட்டம் செயல்பாட் டில் உள்ளது. அடுத்ததாக மும்பை, சென்னை, கோல்கத்தா, பெங்களூர், ஐதரா பாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களில் இத்திட்டம் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், 2வது கட்டமாக திருச்சி,லக்னோ, கோழிக்கோடு, திருவனந்தபுரம், அமிர்தசரஸ் ஆகிய 5 விமான நிலையங்களிலும் விரைவான குடியேற்ற சேவை திட்டம் நாளை (11 ந்தேதி) முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படவுள்ளது. இந்த திட்டத்தை
டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து திருச்சி விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், விமான நிலையத்தில், பயணிகள் குடி யேற்ற சேவைகளை முடிப்பதற்கு, தனி கவுன்டர்கள் உள்ளன. இருப் பினும், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று முடிப்பதற்கு, கூடுதல் நேரம் ஆகிறது. பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் குடியுரிமை, சுங்க சோதனை முடிப்பது சவா லாக உள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து வெளியேற, 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது. இத னால், முக்கிய விமான நிலையங் களில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,அதிக பயணிகளை கையாளும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்த திட் டம் நாளை முதல் செயல்பாட் டுக்கு வரவுள்ளது. இந்த சேவைக்காக, திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச வருகை, புறப்பாடு முனையங்களில், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நான்கு புதிய கவுன்டர்கள் அமைத்துள்ளோம் என்று கூறினார்.

பதிவு செய்வது எப்படி…

இத்திட்டத்தை பயன்படுத்த, , www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இ மெயில் மற்றும் மொபைல் போன் எண் விபரம், புகைப்படம், பாஸ்போர்ட் விபரத்தை பதிவேற் றம் செய்ய வேண்டும். கைரேகை, முகப்படம்உள்ளிட்ட விபரங்களையும் இணைப்பது முக்கியம். கேட்கப்பட்ட விபரங் களை பதிவு செய்தவுடன், அதற் குரிய அடையாள எண், குறுஞ் செய்தி வாயிலாக மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். இந்த குறுந்தகவல், அதிகாரிகளால் சரி பார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பர் . போலி விபரங்கள், புகைப்பட மாற்றம், இருப்பிட விபரங்களில் மாற்றம் கண்டறியப் பட்டால், பதிவு செய்வது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!