திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வருகின்ற 13-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் தில்லை நகர் கழக முதன்மை செயலாளர், அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும், கழக முதன்மை செயலாளரும், டெல்டா மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு முன்னிலையிலும் நடைபெறவிருக்கின்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன்.கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணி, திமுக முப்பெரும் விழா,கழக ஆக்க பணிகள் குறித்து விவாதித்து, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.