தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்ய முயற்சி செய்தனர். இது தொடர்பாக 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆறு தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் ஏற்கனவே திருவிடைமருதூரை சேர்ந்த மகேஷ் (42), மருதுபாண்டி (32) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் உளவு பார்த்து தகவல் கூறியதாக திருவிடைமருதூரை சேர்ந்த சஞ்சய் (22), சேரன்(27) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது
- by Authour
