Skip to content

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்..

  • by Authour

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது குடும்பத்துடன் நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள காயத்ரி தங்கும் விடுதிக்கு வந்த மத்திய மந்திரிக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் விடுதியில் சந்தித்துப் பேசினார். அப்போது தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, வரவேற்பு துறை துணை அதிகாரி பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து விடுதியில் தங்கி இரவு ஓய்வெடுத்ததும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

error: Content is protected !!