கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சாலை ஆழியார் சின்னர்பதி ஒட்டப்பாலம் என்ற இடத்தில் பாண்டிச்சேரி வில்லியனூர் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என மொத்தம் 26 பேர் சுற்றுலாக்கு நேற்று பொள்ளாச்சி வழியாக வால்பாறைக்கு சென்றுள்ளனர் சுற்றுலா முடித்துவிட்டு இன்று மதியம் வால்பாறை இருந்து பொள்ளாச்சிக்கு நோக்கி சுற்றுலா பணிகள் ஏற்றி வந்த வாகனம் வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பட்ட இழந்த வேன் சாலையோரம் இருந்த வனப்பகுதிக்குள் மரத்தில் மோதி நின்றது இதில் ஒட்டுநர் மாதவன், பாலா, ஜான், காமேஷ் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆழியார் காவல் நிலையம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இந்த விபத்தின் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…
- by Authour
