தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது . இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை திருவையாறு வல்லம் பள்ளி அக்ரஹாரம் கண்டியூர் நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திடீரென பரவலாக இடி
மின்னலுடன் கூடிய மழை. தற்போது குருவை சாகுபடி செய்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி. மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில் பகலில் வெப்பம் இருந்தாலும் இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.