Skip to content

சத்தீஷ்காரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் நடந்த மோதலில் மாவோயிஸ்டுகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் பல்வேறு என்கவுன்டர்களில் 243 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

error: Content is protected !!