Skip to content

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன

தஞ்சையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன்‌ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்தப்பட வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து ஒரு புதிய திட்டத்தை அறிவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஆய்வை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே பல மாநில அரசுகள் அறிவித்துள்ளதை போல, தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு அளிக்கக்கூடிய பொருட்களை புளுடூத் மூலம் சரியான எடையில் கொடுப்பதற்கு மறுத்து வருகிறது. இது கண்டிக்கத்தக்க செயல். எனவே சரியான எடையில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வர வேண்டும். ரேஷன் கடைகளை நிர்வாகம் செய்யக்கூடிய அத்தனை துறைகளையும் ரத்து செய்துவிட்டு, தனித்துறையாக அறிவிக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறக்கூடிய சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பட்டு வளர்ச்சித் துறை தொழிலாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி

மாநில அளவிலான மாநாடு தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். என்று கூறினார்

error: Content is protected !!