Skip to content

கரூர் முப்பெரும் விழா.. 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு… அமைச்சர் முத்துசாமி

கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு: இந்த விழா 2026 தேர்தலுக்கான திருப்புமுனையாக அமையும் – ஏற்கனவே, திமுக வெற்றியை நோக்கி வெகு தூரம் சென்று விட்டது. இந்த விழா அதற்கு மேலும் வலு சேர்க்கும் என கரூரில் அமைச்சர் முத்துசாமி பேட்டி.

கரூர் கோடங்கிபட்டி பகுதியில் திமுக முப்பெரும் விழா வருகின்ற 17ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான மேடை பந்தல் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் 3 லட்சத்திற்கு மேலான தொண்டர்கள் பங்கேற்கும் வாய்ப்பு. விழாவிற்கு மிக பிரமாண்டமான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட இருக்கின்றன. ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது அந்த இருக்கைகள் போதாது என்று தோன்றுகிறது. செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்துள்ளார்.

இந்த முப்பெரும் விழா 2026 தேர்தலுக்கான திருப்புமுனையாக அமையும். ஏற்கனவே, திமுக வெற்றியை நோக்கி வெகு தூரம் சென்று விட்டது. இந்த விழா அதற்கு மேலும் வலு சேர்க்கும். முப்பெரும் விழா கரூரில் நடைபெறுவது எங்களுக்கு சற்று பொறாமையாக உள்ளது. எங்கள் ஊரில் இந்த விழா நடத்தலாம் என்ற ஆசை இருந்தது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான தொண்டர்களை விழாவிற்கு அழைத்து வர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!