தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் மற்றும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் தொடங்கினார். ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம், மாநிலம் முழுவதும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் வந்தடைந்த விஜயை, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த வரவேற்பு, விஜயின் அரசியல் பிரவேசத்தின் பெரும் ஆதரவை பிரதிபலிக்கிறது.
திருச்சி போல் முக்கியமான நகரத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது, த.வெ.க-வின் தேர்தல் உத்தியை வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் பயணித்த விஜய், மாரக்கடை சந்திப்பில் நடைபெறும் மக்கள் சந்திப்புக்கு விரைந்தார். வழிமுழுவதும் த.வெ.க தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு, விஜயின் பிரச்சார வாகனத்தின் மீது மலர்கள் தூவி வரவேற்றனர்.
அதே சமயம் , தொண்டர்களின் ஆர்வம் அளவுக்கு மீறியது என்று கூறலாம். ஏனென்றால், மரங்கள், கம்பிகள், சுவர்கள் மீது ஏறி விஜயை காண முயன்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், காவலர்கள் தலையிட்டு தொண்டர்களை பாதுகாத்து இறக்கினர். அதே சமயம், போக்குவரத்து தடைகளையும் ஏற்படுத்தியது. காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார் விஜய். வழிநெடுகிலும் கடல்போல்
திரண்டிருக்கும் தொண்டர்கள் மத்தியில் ஊர்ந்து 2.40 க்கு மரக்கடை வந்தடைந்தார். கிட்டதட்ட 5மணிநேரத்திற்கு பிறகு வந்தடைந்தார்.
மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு தவெக தலைவர் விஜய் பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். என் நெஞ்சில் குடியிருக்கும் என தொடங்கிய விஜய்.. போருக்கு செல்பவர்கள் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். திருச்சியில் துவங்கினால் திருப்புமுனை ஏற்படும். 1974ல் எம்ஜிஆர் மாநாடு தொடங்கியது திருச்சியில் தான். எங்கள் கொள்கை தலைவர் பெரியார் பிறந்த மண் திருச்சி.மத நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற இடமாக திருச்சி உள்ளது. ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு உங்களை சந்திக்க வந்துள்ளேன். நீட், கல்வி கடனை ரத்து செய்யவில்லை. திமுகவை இனி மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா?.. சொன்னீர்களே.. செய்தீர்களா?.. வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?. வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள் ..கொடுத்தார்களா.? . திருச்சி ரயில்வே கட்டுமான பணிகள் எப்போது முடியும்?. கிட்னி திருட்டை முறைகேடு என்கிறார்கள் . நம்பிக்கை மோசடி செய்துவிட்டீர்கள். வரும் தேர்தலில் தவெக வெற்றி நிச்சயம். சாலை, மின்சாரம் வசதி ஏற்படுத்தி தருகிறோம் என்று இவ்வாறு பேசினார். விஜய் பேச்சு கேட்காததால் தொண்டர்கள் 7 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்..