Skip to content

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலை பணியாளர்களின் சங்க கோட்ட மாநாட்டில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 9வது கோட்ட மாநாடு பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது.
கோட்டத் தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு கோட்டத் துணைத் தலைவர்கள் வீரமுத்து, வெள்ளியங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். இதில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும், சாலைப் பணியாளர்களில் இறந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படை பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்து, அரசே நெடுஞ்சாலைகளை பராமரித்து கிராமப்புற இளைஞர்களை சாலைப்பணியாளர்களாக நியமிக்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித் திறன் பெறாத ஊதியம் ரூபாய். 5,200 – ரூ. 20,200 தர ஊதியம் ரூபாய். 1,900 வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு முன்னதாக பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக பேரணி துவக்கப்பட்டு மாநாடு நடைபெற்ற வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் நிறைவடைந்தது.

error: Content is protected !!