Skip to content

ஆம்புலன்சு கிடைக்காததால் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் அழைத்து வரப்பட்ட சிறுமி

  • by Authour

கேரளாவின் மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த 18 வயதான பில்ஜித் என்ற இளைஞர், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்தனர். இதையடுத்து, இதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று இதயத்திற்காக காத்திருந்த 13 வயது சிறுமியின் குடும்பத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். Air Ambulance கிடைக்காததால், கொல்லத்தில் இருந்து கொச்சி தனியார் மருத்துமனைக்கு அந்த சிறுமி வந்தே பாரத் ரயிலில் வரவழைக்கப்பட்டார்.

சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு சாலை வழியாக இதயம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு 1.25 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை 3.30 மணிக்கு நிறைவடைந்தது. முழு அறுவை சிகிச்சை நடைமுறைகளும் முடிவதற்கு காலை 6 மணி வரை ஆனது. சிறுமியின் உடலில் பொருத்தப்பட்ட இதயம் இப்போது துடிக்கத்தொடங்கியுள்ளது. விரைவில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக வந்தே பாரத் ரயிலில் ஒரு சிறுமி அழைத்து வரப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

 

 

error: Content is protected !!