தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா திருவிழாவை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பாலிகை போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .அதிலிருந்து தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்று அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மண்ணப்பன் குளம் விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள்
பாலிகை எடுத்து ஊர்வலமாக மேளதாளம் வான வேடிக்கையுடன் மெயின் ரோடு பேருந்து நிலைய விளாகம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாலிகை திருக்கோவிலுக்கு வந்தது பாலிகையோடு அம்மன் ஊர்வலமாக வந்தன. மேலும் கோவிலில் பாலிகையை வைத்து பெண்கள் கும்மி அடித்து அம்மனை வழிபட்டனர் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.