Skip to content

அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

மாநிலத்தின் உரிமை காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம், நீட் தேர்வு ஒழிப்பு, உரிய கல்வி நிதிக்காக போராடுவோம் என 68,000 பூத்களிலும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்”

error: Content is protected !!