தஞ்சை அருகே வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை தெற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தோ.அருளானந்த சாமி, சோ.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரை.ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தனபால், மரு.சுந்தர்ராஜ், சிங்.அன்பழகன், நகர அவைத் தலைவர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள் வார்டு கழகச் செயலாளர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வல்லம் பேரூர் கழக செயலாளர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.