கரூர்- 14.09.25
கரூரில் நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை அட தெரு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் திமுக
முப்பெரும் விழா வருகின்ற 17ஆம் தேதி புதன்கிழமை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கான மேடை பந்தல், ஆர்ச், அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது .
இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முன்னாள்
அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவில் முப்பெரும் விழா இந்த முறை கொங்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூரில் சிறப்பாக வரலாற்றில் இல்லாத அளவில் முதல்வர் கூறியபடி 2026 தேர்தல் வெற்றி பாதைக்கு அடித்தளமாக இந்த மாநாடு அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எந்த ஒரு பணியை கொடுத்தாலும் மிகப் பிரமாண்டமாக செய்யக்கூடியவர் செந்தில் பாலாஜி. திமுக வெற்றிக்கு முப்பெரும் விழா ஒரு சான்றாக அமையும்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுதிமொழி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று எடுக்கப்பட்டது.
நாளை மறுநாள் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா அன்று உறுதி மொழி எடுக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து மாநாட்டிலும் உறுதிமொழி எடுக்கப்பட இருக்கிறது.
வருகிற 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் எல்லாம் மாவட்டத்திலும் திமுகவினர் உறுதி மொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.