கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி இவர் அப்பகுதியில் டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டு வருகிறார், இவரது மனைவி மலர்(26) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது, மணிக்கு குடிப்பழக்கம் இருந்து கொண்டுள்ளது இதை அடுத்து மலர் குடும்பத்தை கவனிப்பதற்காக கேட்டரிங் மற்றும் மருத்துவமனைகளில் பகுதி நேரங்களில் பணிபுரிந்து வந்துள்ளார், இதனால் கணவன் மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று இரவு மலர் தூக்கில் இட்டு தற்கொலை செய்துள்ளார், மயங்கிய நிலையில் இருந்த மலரை மணி மற்றும் அவர்கள் குடும்பத்தார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்துள்ளனர் ஆனால் மலர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மலரை பிரத பரிசோதனைக்கு மணி கையெழுத்து போட வராததால் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் கிழக்கு நிலைய ஆய்வாளர் முருகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் திடீரென மலரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, மலரின் கணவர் மணி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு திடீரென வந்ததால் உறவினர்கள் போலீசார் முன்னிலையில் மணியை தாக்கினர் இதனால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது .
