Skip to content

ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார்

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நம்பெருமாள் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்று,

சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். அப்போது சித்திரை வீதிகளில் பக்தர்கள் தங்கள் இல்லத்தில் இருந்து கிருஷ்ணருக்கு எண்ணை காணிக்கையாக வழங்கினர்.

மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்கள், கிருஷ்ணருடன் புறப்பட்டு, அம்மா மண்டபம் சாலையில் ஆஸ்தான மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணன் சன்னதி அருகில் உறியடி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

error: Content is protected !!