பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் மாவட்ட கலெக்டர் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர். இதில் பிறப்புக்கும் எல்லாம் உயிருக்கும் என்ற அன்பு நெறியையும்- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வில் வழிமுறைகளைக் கடைபிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமை திறனும் பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்து கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியை அடித்தளமாகக் கொண்டு சமுதாய அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் என தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.