தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காசிமுத்து,75,. விவசாயி. இவரின் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த, சிறுமியை அழைத்து, நெல்லிக்காய் பறித்து தருவதாக கூறியுள்ளார்,
சிறுமி நெல்லிக்காயின் ஆசை மீது, காசிமுத்துவுடன் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றது. இதையடுத்து தனியாக அழைத்து சென்ற சிறுமியிடம், காசிமுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமி, பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நேற்றுமுன்தினம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில், புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் காசிமுத்துவிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்தது. தொடர்ந்து நேற்று போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து, காசிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.