கடந்த 2024 அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 28) த/பெ சௌந்தர்ராஜன் என்பவர் வேறு ஒரு ஊரைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அங்கிருந்து தப்பித்த பெண், அளித்த புகாரின் அடிப்படையில் 26.02.2024 அன்று மாலை விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதைய உடையார்பாளையம் வட்ட காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் புலன் விசாரணைகள் மேற்கொண்டு கொளஞ்சிநாதனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மகிளா நீதிமன்ற நீதிபதி மணிமேகலை, கொளஞ்சிநாதனுக்கு பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் (அபராதமும் கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனை). மேலும் தன்னிச்சையாக காயம் விளைவித்த குற்றத்திற்கு 1ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் (அபராதம் கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை)விதித்து தீர்ப்பளித்தார்கள். இதனை அடுத்து அரியலூர் மாவட்ட காவல் துறையினர் கொளஞ்சிநாதனை திருச்சி மத்திய சிறைக் கொண்டு சென்றனர்.

