அமித்ஷாவை சந்தித்தபின் ஈபிஎஸ் முகத்தை மூடியபடி வந்ததாக விமர்சனம் எழுந்தநிலையில் சேலம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது…. என் டில்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கைக்குட்டையால் முகத்தை துடைத்ததை விமர்சனம் செய்வது நாகரிகமற்றது. விஸ்வாசம் என்றால் என்ன விலை எனக் கேட்பவர் ரகுபதி.
எதிர்கட்சியாக இருந்த போது செந்தில்பாலாஜியை ஊழல்வாதி என்றார் முதல்வர் ஸ்டாலின். இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது திமுக. எதிர்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சித்தார்களோ, தற்போது அவர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
19.12.2011ல் அதமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான் டிடிவி தினகரன் சென்னைக்கே வந்தார். டிடிவி எந்த உள்நோக்கத்துடன் பேசுகிறார் என்று தெரியவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது மோடிக்கு கருப்பு கொடி, ஆளுங்கட்சி ஆன பிறகு வௌ்ளை கொடி காட்டுகின்றனர்.
எனது எழுச்சி பயணம் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் சில பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கார் இல்லாததால், மாற்றுக்காரில் மாறி ,. மாறி சென்றேன் என்று இவ்வாறு தெரிவித்தார்.