திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,ஸ்ரீ ஆதிவேலவர் தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் மற்றும் ஸ்ரீ ஆதி விநாயகர் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. 14-ந்தேதி கணபதி ஹோமம், யாக வேள்வியுடன் கடம்புறப்பாடு நடந்தது.தொடர்ந்து ஆதி விநாயகருக்கும் ஆதி வேலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம். தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ ஆதி வேலவர் ஆலய ஸ்தல வரலாறான சுமார் 250 வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்களால் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கல் மண்டபம் இது (இப்பொழுது புணரமைக்கப்பட்டுள்ளது). காலப்போக்கில் கல்மண்டபம் என்ற பெயர் மருவி கருமண்டபம் என்று அழைக்கப்பட்டு இந்த ஊரின் பெயர் வரக்காரணமாக அமையப்பெற்றுள்ளது.
இங்கே ஆதி வேலவர் சுமார் 130 வருடங்களாகவும், ஆதி விநாயகர் சுமார் 75 வருடங்களாகவும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். அருள்மிகு ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெறும் அனைத்து விசேஷ பூஜைகளும் முதலில் இங்கே பூஜை செய்த பிறகுதான் நடைபெறுகிறது. பல முனிவர்கள் இங்கே வந்து தியானம் செய்து சென்றதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேகத்தை அடுத்து 48 நாள் மண்டல பூஜை திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது.தினமும் நடக்கும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிகழ்வில் பக்தர்களுக்கு பூஜை முடிந்ததும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்விழா ஏற்படுகளை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜெயபால், அறக்கட்டளை தலைவர் ஆர். ஞானசேகர், பொருளாளர் கண்ணதாசன், துணைத் தலைவர் கள் பி.ஆர். பாலசுப்ரமணியன், டி. ராமராஜ், செயலாளர் பரமசிவம், உறுப்பினர் டிபன் கடை கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திருச்சி கருமண்டபம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.