தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பலர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் திடீரென பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் தெற்கு சேர்பட்டியில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வசதியாக சொசைட்டி ஆரம்பித்து தர கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பால்வளத்துறை அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சுமார் 4.5 கிலோமீட்டர் வரை சென்று பாலை வடக்கு சேர்பட்டியில் உள்ள சொசைட்டியில் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே இதை கண்டித்து பாலை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.
