Skip to content

தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை , பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷின் ராபிஸ் கோவா இணைந்து ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பு ஊசி போடும் திட்டத்தினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதன்படி தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கும் சென்று முதல் கட்டமாக சாலையில் சுற்றி தெரியக்கூடிய சமுதாய நாய்கள் 35 ஆயிரம் மற்றும் வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சை மாநகராட்சியில் 1வது

வார்டு பகுதியில் பயிற்சி பெற்ற நாய் பிடிப்பவர்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக சென்று தெருவில் வரை போட்டு வெற்றி தெரியும் நாய்களை பிடித்து அதற்கு தடுப்பூசி போடப்பட்டு தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு நெற்றியில் வண்ண அடையாளமும் இடப்பட்டது அது மட்டும் இன்றி ராபீஸ் செயலியில் பதிவேற்றமும் செய்து அதே இடத்தில் விடப்படுகிறது இதன் மூலம் நாய்க்கடி பாதிப்பு குறையும் என்றும் இது மாவட்ட முழுவதும் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளில் 7500 நாய்களுக்கு கருத்தடை செய்து வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது ஒவ்வொரு பகுதியாக சென்று அனைத்து சமுதாய நாய்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது கல்லூரி பள்ளி பொதுமக்கள் விழிப்புணர்வோடு தங்கள் பகுதியில் இருக்கும் சமுதாய நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு கண்டறிந்து அதனை வெறிநோய் தடுப்பூசி போட அறிவுறுத்தவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது இதற்காக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

error: Content is protected !!