Skip to content

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம், தும்பிவாடி, தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், சூடாமணி, கூடலூர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.537.44 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், பகுதிநேர நியாயவிலை கடை தொடக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமிபூஜை செய்து

தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கூட்டுறவு சங்க அலுவலகர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், தொக்குப்பட்டி, புதூர், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை நல பணியாளர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கியதோடு, தூய்மை தொடர்பான உறுதிமொழியையும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஏற்றுக்கொண்டார்.

error: Content is protected !!