கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில் கரூர், 80 அடி சாலையில் நடைபெறுகிறது. கழக துணை பொதுச் செயலாளர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி N.சிவா சிறப்புரையாற்றுகிறார். அதுசமயம் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுகுழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் – பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு முன்னாள் அமைச்சருமான கரூர் மாவட்ட திமுக செயலாளருமான V.செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்.. VSB அழைப்பு..
- by Authour
