Skip to content

பொள்ளாச்சி..மருத்துவ கழிவை கொட்டி தீ வைப்பு…வன விலங்குகள் இறக்கும் அபாயம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி நரி முடக்குப் பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி பொள்ளாச்சி வனச்சரகம் பகுதியாகும், இங்கு அதிக அளவு வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்வதற்காக வனத்துறை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது இதனால் யானை மான் போன்ற வனவிலங்கு அடிக்கடி வந்து தண்ணீர் அருந்திவிட்டு செல்வது வழக்கமாக உள்ள நிலையில் தடுப்பணைக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் யாரோ மருத்துவ கழிவுகளைக் கொட்டி தீ வைத்து சென்றுள்ளனர்

இந்தக் கழிவுகளில் சிரஞ்ச் ஊசி மருந்து பாட்டில்கள் அதிக அளவில் காண முடிந்தது இந்த மருத்துவ கழிவுகள் கொட்டை தீ வைக்கப்பட்டுள்ளதால் இவ் வழியாக தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் காலில் குத்தி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது ஆகையால் இந்த இடத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டி தீ வைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு இப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!