Skip to content

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி மற்றும் சிவகாசி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் வீடுகளிலும் பட்டாசு ஆலைகளிலும் இரவுகளில் பட்டாசு தயாரிப்பதாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில், வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சல்வார்பட்டி டிஎஸ்பி தலைமையான போலீசார் வெம்பக்கோட்டை மற்றும் சல்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளில் தயாரிக்கப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீடுகளில் பட்டாசு தயாரிப்பது உறுதி செய்ததையடுத்து, அந்த இடங்களில் இருந்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைப்போன்று சேதுராமலிங்கபுரம் பகுதியில் இரவு பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்றிருக்கிறது. அதனை அறிந்த காவல் அதிகாரிகள் அந்த இடத்தில் சோதனை என்பது மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது ஏராளமான பட்டாசு கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசரனை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!