Skip to content

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ஒடிசா மாநிலம் கெண்ட்ரபரா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். சிறுமிக்கு அதே மாவட்டம் தாமோதர்பூர் கிராமத்தை சேர்ந்த ஜிண்டு ஜனா என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜிண்டு ஜனாவை பார்க்க கடந்த 10ம் தேதி  சிறுமி தாமோதர்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால், சிறுமியை அவரது வீட்டில் உடனடியாக விட்டுவிடும்படி ஜிண்டு ஜனாவின் தாயார் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியை தனது பைக்கில் அழைத்துக்கொண்டு ஜிண்டு ஜனோ சென்றுள்ளார். சிறுமியை அவரின் கிராமத்திற்கு அழைத்து செல்லாமல் அருகே உள்ள முந்திரி தோப்பிற்கு அழைத்துச்சென்று சிறுமியை ஜனோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். தனக்கு நடந்த கொடூரத்தால் மன உளைச்சல் அடைந்த சிறுமி வீட்டிற்கு வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிண்டு ஜனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

error: Content is protected !!