Skip to content

திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

கன்னியாகுமாரி கிழக்கு மாவட்டம் சார்பாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ மற்றும் ஓரணி​யில் தமிழ்​நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நாகர்கோவில் பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் வாயிலாக திமுகவில் இணைந்தவர்கள், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் வந்ததால், தனது பேச்சை நிறுத்தி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு கனிமொழி எம்.பி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!