Skip to content

கோவை… செல்ல பிராணி நாயை திருடி செல்லும் மர்ம நபர்.

  • by Authour

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில்கள் நடந்து வருகிறது. ஏராளமான தொழில்கள் நடந்து வரும் தொழில நகரத்தில் சமூக விரோத செயல்களின், திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

காசு, பணம், துட்டு, பொன், பொருள், வாகனங்கள் வரிசையில் தற்பொழுது செல்லப் பிராணிகளான நாய்களும் திருடப்படும் சம்பவம் கோவையில் அரங்கேரி உள்ளது.

கோவை, சாய்பாபா காலனி, கே.கே புதூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், அவரது மனைவி நந்தினி ஆகியோருடன் குடும்பத்துடன் நேசித்து வருகிறார். இவர்கள் வீட்டிற்கு காவலாகவும், செல்லப் பிராணியாகவும் நாய் வளர்க்க ஆசைப்பட்டு உள்ளனர். அதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற உயர்ரக நாயை வாங்கி வளர்க்க வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டு இருந்த அந்த நாயை, அப்பகுதியில் நடந்த சென்று கொண்டு இருந்த ஒருவர் நாயின் கழுத்தில் அணிந்து இருந்த செயினை பிடித்து இழுத்துச் சென்று உள்ளார். நாயை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் அப்பகுதியில் இருந்து நபர்களிடம் விசாரித்து உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு பார்த்த போது அதில் ஒருவர் அந்த நாயை பிடித்து இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

அதனை காட்சிகளை வைத்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்ததாக.

நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கும் சம்பவத்தை தொடர்ந்து, தற்போது வளர்ப்பு பிராணிகளும் கோவையில் திருடப்படும் சம்பவங்கள் கோவை வாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!