Skip to content

திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்றதாக உறையூர் வெக்காளிஅம்மன் ஆலயம் திகழ்கிறது. வானமே கூரையாகக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும்வகையில் மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும் உறையூர் வெக்காளி அம்மன் ஆலயத்தில் அமாவாசை தினங்களில் வெக்காளி அம்மன் ஊஞ்சல் வைபவம் சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மிகவும் சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை தினமானஇன்று வெக்காளியம்மன்ஆலய

உற்சவமண்டபத்தில், வெக்காளி அம்மனுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி உள்பிரகாரங்களில் வலம்வந்து பின்னர், வண்ணவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார்.

தொடர்ந்து ஊஞ்சல் வைபவம் கண்டருளிய வெக்காளி அம்மனுக்கு மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.

error: Content is protected !!