Skip to content

திருச்சி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா. .விருது வழங்கல்

திருச்சி தமிழ் சங்கத்தில் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பொறியாளர் தினம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் 65 நபர்களுக்கு ” ஞானச்சுடர் விருது வழங்கப்பட்டது.கட்டிட பொறியாளர்கள் 10 பத்து நபர்களுக்கு “விசுவேசுவரய்யா “விருது வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசனத் தலைவர், மாவட்ட தலைவருமான அரிமா முகமது ஷபி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து , அனைவரையும் வரவேற்று பேசினார்.திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக 3242எப் அரிமா மாவட்டம் இரண்டாம் துணை ஆளுநர் லயன் ஸ்டாலின் அவர்கள் மற்றும் 3242எப் அரிமா மாவட்டம் முன்னாள் ஆளுநர் லயன் ஷேக் தாவுத் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். மண்டலத் தலைவர் லயன் அனந்தகிருஷ்ணா, வட்டாரத் தலைவர் லயன் பிரசன்ன வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார்கள் . சேவை செயலாளர் லயன் சந்திரசேகர், பொருளாளர் லயன் கோகிலா மெர்லின் முன்னிலை வகித்தார்கள். இறுதியில் நிர்வாக செயலாளர் லயன் முகமது உமர் கத்தாப் நன்றியுரை நிகழ்த்தினார். முன்னதாக செல்வி ஸ்சாக்ஷித்தா, செல்வி அத்விகா பாலாஜி இருவரும் பரதநாட்டிய வரவேற்பு நடனம் ஆடினார்கள்.

error: Content is protected !!