தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்
திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணால் (34). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார் .இவரது 14 வயது மகள் அங்குள்ள கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வணிக வளாக காவலாளி திடீர் மரணம்
திருச்சி தில்லை நகர் எட்டாவது கிராஸ் வடவூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 62 இவர் தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் காவலாளியாக பணியாற்றி வந்தார் சம்பவத்தன்று பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் அவரது மூக்கின் வழியாக ரத்தம் வழிந்து காணப்பட்டது இது குறித்து அவரது மகன் நாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றுப்பாலத்தில் பஸ் மோதி முதியவர் பலி
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (65). இவர் தனது நண்பருடன் டூவீலரில் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சந்திரசேகர் பலத்த காயமடைந்தார் . அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.