Skip to content

த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மனு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கடந்த 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த த.வெ.க. பிரசாரத்தின்போது போலீஸ் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, விஜய்யின் பிரசாரத்திற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர். விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என த.வெ.க. சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க.வின் வழக்கில், தங்களையும் சேர்க்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை விட த.வெ.க.விற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!