நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் உருவான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .இவர் தமிழ்நாடு அரசு விருது ,சைமா விருது மற்றும் பிலிம் பேர் விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார் .இவர் நடிக்கும் புதிய படம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் கேஆர்ஜி கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. இதை சின்னசாமி பொன்னையா எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிகிறது. கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 5வது படம் இது. முன்னதாக பிரபுதேவா, வடிவேலு, யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்றும் ஒரு படத்தை அவர்கள் அறிவித்திருந்தனர்.
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்…
- by Authour
