Skip to content

அரசு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.. திருச்சி கோர்ட்டில் அதிமுகவினர் ஆஜர்…

  • by Authour

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர் பூபதி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் அரவானூர் பன்னீர்செல்வம், முத்தையா, சுப்ரா, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் அரசு அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக கூறி உறையூர் போலீசார் அதிமுக பகுதி செயலாளர் பூபதி உள்ளிட்ட ஐந்து அதிமுகவின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஜெ.எம். 4 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பகுதி செயலாளர் பூபதி, நிர்வாகிகள் அரவானூர் பன்னீர்செல்வம், முத்தையா, சுப்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர்ஆஜரானார்கள்.இந்த வழக்கு தொடர்பாக அதிமுக வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ்,சசிகுமார் ஜெயராமன் புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!