அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம். தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவனீத், இயக்குனர் அசித்குமார் பர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தலைமை நிர்வாக அதிகாரி வனிதா வேணுகோபால், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் க. செந்தில்குமரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்விழா நிகழ்ச்சியின் முடிவில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மண்டல புல முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார்.