Skip to content

குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டம்பட்டியில் நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது.

அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு காற்றாலை வேண்டாம் என்று கூறி இன்று தளவாட பொருட்கள் கொண்டு வந்த லாரியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தோகை மலை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில்

ஈடுபட்டனர். கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டன் பட்டியில் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டு செய்து வருவதாகவும், தற்போது எங்களது பகுதியில் காற்றாலைகள் நிறுவப்பட்டு வருகிறது. இதற்காக தளவாடப் பொருட்கள் பெரிய கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறாக வரும் கனரக வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலை ஓரம் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டி வருவதாகவும்,.மேலும் விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வதாகவும், குட்டை போன்ற சிறிய நீர்நிலைகளை மண் கொட்டி பாதை அமைத்து மழைநீர் செல்லும் பாதையை தடுத்து உள்ளதாகவும் இதனால் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்ட தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும் இதனால் இப்பகுதியில் காற்றாலை அமைப்பதை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தடுத்து நிறுத்தி விவசாயத்தை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!