கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை ஒட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தது.
கரூரில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சாலையில் சாய்ந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.
குறிப்பாக கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கொடிக்கம்பம் ஆபத்தான முறையில் சாலையில் விழுந்து கிடப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் காவல் கண்காணிப்பாளர் உதய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

