Skip to content

2026ல் நல்லதே நடக்கும்…. நாமக்கல்லில் விஜய் பேச்சு

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் – நாமக்கலில் தவெக தலைவர் விஜய்.

போக்குவரத்து ஹப் ஆக உள்ள நாமக்கலும், முட்டையும் ரொம்ப ஃபேமஸ்; தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவான முட்டையை கொடுக்கும் ஊராக மட்டுமில்லாமல், உணர்ச்சியூட்டும் மண்ணும் இதுதான்.

அண்ணன் கேப்டன் பேசிய, ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும், நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன் அவர்கள் தான்.

“இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய, சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி எண் 456-ல் கொடுத்தது யாரு? சொன்னாங்களே… செஞ்சாங்களா?”

வாக்குறுதி எண் 50: ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை உலர் கலங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும். வாக்குறுதி எண் 66: கொப்பரை தேங்காய்களை, அரசே கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து நியாயவிலைக் கடைகளில் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை. வாக்குறுதி எண் 68: நியாயவிலைக் கடைகளில் நாட்டுச்சக்கரை, வெல்லம் விநியோகிக்க நடவடிக்கை.  வாக்குறுதி எண் 152: போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம்.

இதையெல்லாம் சொன்னார்களே… செய்தார்களா?

நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை, ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமுடைய கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது நாமக்கல்லை சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளர்கள் என சொல்லப்படுகிறது. இத்திருட்டுக்கு கந்துவட்டி கொடுமைதான் ஆரம்பப் புள்ளி. அச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்றாலும், தவெக ஆட்சி அமைந்தவுடன் தண்டிக்கப்படுவர். விசைத்தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து, எங்கள் தேர்தல் அறிக்கையில் செல்வோம்… சாரி சொல்வோம்”

அடிப்படை சாலை வசதி, குடிநீர், பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை விஷயங்கள்தான் மக்கள் கேட்கின்றனர்; அதை சமரசங்களின்றி நாங்கள் செய்வோம் என நாங்கள் சொல்லிவிட்டோம் ‘இதைத்தானே எல்லோரும் சொல்கின்றனர், இவரென்ன புதிதாக சொல்வார்?’ என்கின்றனர்; திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் கொடுக்க மாட்டோம். ‘புதுசா சொல்லுங்க, புதுசா சொல்லுங்க’ என்றால், என்னத்த புதுசா சொல்றது? செவ்வாய் கிரகத்தில் ஐ.டி. கம்பெனி கட்டப்படும், காற்றில் கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள் விமானம் இயக்கப்படும் என அடித்து விடலாமா? நம் முதல்வர் போல அடித்து விடலாமா வாக்குறுதிகளை?-தவெக தலைவர் விஜய். இந்த பாசிச பாஜக அரசோடு நாங்கள் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம்; குறிப்பாக திமுக போல பாஜக-வோடு மறைமுக உறவுக்காரர்களாக இருக்க மாட்டோம்.

மூச்சுக்கு 300 முறை அம்மா, அம்மா என சொல்லிவிட்டு, ஜெயலலிதா அவர்கள் சொன்னதையெல்லாம் மறந்து பாஜக-வுடன் பொருந்தாக்கூட்டணி அமைக்க மாட்டோம்; ‘தமிழ்நாட்டு நலனுக்காக இந்தக் கூட்டணி’ என்றும் சொல்ல மாட்டோம். “அதிமுக – பாஜக கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை”. இந்த பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டது? நீட் தேர்வை ஒழித்ததா? கல்வி நிதியை விடுவித்ததா? பின் எதற்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி?

இதை நான் கேட்கவில்லை… புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.-ன் உண்மைத்தொண்டர்கள் கேட்கின்றனர். சரி அவர்கள் கூட்டு பொரியல், அப்பளம் என ஏதாவது கிளறிக்கொள்ளட்டும். அதிமுக – பாஜக கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதேநேரம், திமுக குடும்பம் பாஜக-வுடன் மறைமுக உறவுக்காரராக இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அடுத்த தேர்தலில் நீங்கள் திமுக-விற்கு வாக்களித்தால், அது பாஜக-விற்கு போடும் வாக்குதான். ஆகவே யோசித்து ஜாக்கிரதையாக செயல்படுங்கள் மக்களே-தவெக தலைவர் விஜய்.

error: Content is protected !!