Skip to content

ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.  நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள ஹிமாயத் சாகர் அணை திறந்ததே வெள்ளப்பெருக்கிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கனமழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று நள்ளிரவில் அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தண்ணீர் முசி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சடர்காட் கார்ப்பரேஷன் எல்லைக்குட்பட்ட மிதிலா நகர் காலனியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பாதுகாப்பு கருதி 1000-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று இரவில் பல இடங்களில்  மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

error: Content is protected !!