கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது வரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
110 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்
கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் மருத்துவ பரிசோதனை முடிந்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1-ல் நீதிபதி பரத் குமார் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.