Skip to content

தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ.

இந்த மேம்பாலத்தால் அந்த பகுதியில் இருக்கும் டிராஃபிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணி ஜூன் 2023-ல் தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் திறப்பு கொஞ்சம் தள்ளிப்போனது. புர்கிட் சாலையில் இருந்து பழைய மேம்பாலம் வரை வேலை செய்ய போலீஸ் அனுமதி தேவைப்பட்டது. அந்த அனுமதி கிடைக்க தாமதமானதால் திறப்பு தள்ளிப்போனது.

இந்த மேம்பாலம் சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், அண்ணா நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில், தி.நகர் மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய மேம்பாலத்தால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பாக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
error: Content is protected !!