கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனை கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் நலச் சங்கம் ஆகியன சார்பில் இலவச வீட்டு மனை கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தாலுகா செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி துவக்கி வைத்தார். இதில் ஆனைமலை, காளியாபுரம், ஊஞ்சவேலம்பட்டி, நெகமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..
- by Authour
