Skip to content

பிலிப்பைன்ஸ்…. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 26 பேர் பலி

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் 6.9 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம். பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவாதவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையமானது லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
error: Content is protected !!