கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி (செப்டி டேங் ) சுத்தம் செய்ய இறங்கிய தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஜெயராம், கூடலூரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் மைக்கேல் ஆகிய மூன்று பேரும் விஷவாயுத்தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர். கழிவு நீர் தொட்டியை முதலில் சுத்தம் செய்ய இரண்டு பேர் இறங்கியவர் மயங்கி விழுந்ததால், அவரைக் காப்பாற்ற இறங்கினர். தொடர்ந்து மூன்று பேரும் சிக்கிக் கொண்டனர். இதில் மூவரும் விஷ வாயு வாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து உள்ளனர்.
பின்னர் மூவரையும் காணாததால், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களும் மீட்புப் பணிகளில் பங்கேற்றனர். நள்ளிரவு 12 மணியளவில் மூன்று சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கட்டப்பனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .