கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் வடசென்னை-2 இல்லை, ஆனால் வடசென்னை உலகத்திற்குள் இருக்கும் ஒரு கதைக்களமாக இருக்கும். மாணவர்கள் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். நாம் யாரை பின்தொடர வேண்டும், எதற்காக பின்தொடர வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். ஒரு நபரை பின் தொடரும்போது குறைந்தபட்சம் எது சரி, எது தப்பு, எதை செய்யணும், எதை செய்யக்கூடாது என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். நாம் பின் தொடர்கிற நபர் சரியான நபரா, நாம் எதற்காக அவர்களை பின் தொடர வேண்டும் போன்ற எல்லா விஷயங்களும், நமக்கு தெரிந்திருக்க வேண்டும், மனிதன் என்பவன் ஒரு Social Political animal என்பதை சரியாக புரிந்துகொண்டு நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று பகுத்தறிய வேண்டும்” என்றார்.
சரியானவர்களை பின்பற்ற வேண்டும்….டைரக்டர் வெற்றிமாறன்
- by Authour
